தஞ்சாவூர்

கேன்டீனை மூட முயற்சி: 3-ஆவது நாளாகப் போராட்டம்

DIN

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான கேன்டீன் மூடப்படும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் சங்கத்தினர் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் உள்ள இந்த கேன்டீன் 2006 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், சுமார் 3,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், இந்த கேண்டீனை மூட ராணுவ உயர் அலுவலர்கள் முயற்சி செய்வதாகவும், அம்முயற்சியைக் கைவிட வலியுறுத்தியும் கேண்டீன் வளாகத்தில் தஞ்சை மாவட்ட முன்னாள் படை வீரர் சங்கத்தினர் அக். 13-ம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவர் சி.டி. அரசு தலைமை வகித்தார். இதில், பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT