தஞ்சாவூர்

குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூர் மாநகரில் குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலப் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூரில் இப்பேரவையின் அக்டோபர் மாதக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மர்ம காய்ச்சல் பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் பொது சுகாதாரத்தையும், புதை சாக்கடைகள் ஆங்காங்கே சாலையில் ஓடுவதையும், குப்பைகள் குவிந்து காணப்படுவதையும் அறிந்து, அவற்றை அகற்ற உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மாவட்டத்தில் பல கிராமங்களில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளின் மின் மோட்டார்கள் இயங்காததால் அவை செயல்படாமல் மக்கள் குடிநீருக்குக் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் தலைவர் அர. தங்கராசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெ. பழனியப்பன், செயலர் மா. பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பி. பன்னீர்செல்வம், ஏ. பிச்சை பிள்ளை, சட்ட ஆலோசகர் வெ. ஜீவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT