தஞ்சை மாவட்டத்தில் இன்று 19 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்.3) 19 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்.3) 19 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: நிகழ் காரீப் பருவம் 2017 - 18 ஆம் ஆண்டு கோடை நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகச் சிறப்பு அனுமதியின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம்.