தஞ்சாவூர்

ரூ. 80 கோடி சிலை கடத்தல் வழக்கு: கும்பகோணம் நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜர்

DIN

ரூ. 80 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் கும்பகோணம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். 
  திருவண்ணாமலை மாவட்டம்,  வந்தவாசி அருகில் சௌந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், பையூர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில், சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் ஆகிய கோயில்களில் கடந்த 2015 ஆம் ஆண்டு சிவன்-பார்வதி சிலை,  ஆதிகேசவ பெருமாள் சிலை,  இரு பூதேவி சிலைகள்,  இரு  ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேசபெருமாள் சிலை, சக்கரத்தாழ்வார் ஆகிய ரூ. 80 கோடி மதிப்பிலான எட்டு ஐம்பொன் சிலைகள் காணாமல்போனது. 
இந்தச் சிலைகளை கடந்த 14.5.2015 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் தனலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் பிடித்து, தனலிங்கத்தை கைது செய்தனர். இதில் 15 பேருக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள மாரீஸ்வரன், சண்முகம், ஜாய்சன் சாந்தகுமார், தமீம்பாட்ஷா, சபரிநாதன், தனலிங்கம், கோகுல்பிரகாஷ், திரைப்பட இயக்குநர் வி. சேகர், பார்த்திபன் ஆகியோரும், சிறையில் உள்ள ஜெயக்குமார், விஜயராகவன், முஸ்தபா ஆகிய 12 பேரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.  
மேலும், வழக்கில் தொடர்புடைய ராஜசேகர், சண்முகநாதன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வரும் 25 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT