தஞ்சாவூர்

சுமை ஆட்டோ - அரசுப் பேருந்து மோதல்: 7 பேர் காயம்  

DIN

 
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் லேணாவிளக்கில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு வந்து திரும்பிய சுமை ஆட்டோ அரசுப் பேருந்துடன் மோதிய விபத்தில்  பெண்கள் 7 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் லேணாவிளக்கு பகுதியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவிற்கு வாக்குகள் கேட்டு செவ்வாய்க்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பொன்னமராவதி ஒன்றியப் பகுதியிலிருந்து அதிமுக, பாஜக கூட்டணி தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். இந்நிலையில், பொன்னமராவதி ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்திலிருந்து கட்சியினர் சுமை ஆட்டோவில் கூட்டத்திற்குச் சென்று திரும்பியபோது கீழப்பட்டி விளக்கு வளைவுச்சாலையில் எதிரே வந்த அரசுப்பேருந்து ஆட்டோவை உரசிச் சென்றுள்ளது. 
இதில் ஆட்டோவில் பயணித்த ஈச்சம்பட்டியைச் சார்ந்த ஆர். மஞ்சுளா (33), ச.ராஜேஸ்வரி (34)வெ.மஞ்சுளா (27) லெட்சுமி உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொன்னமராவதி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 
இதில் ஈச்சம்பட்டியை சார்ந்த வெ.மஞ்சுளா(27) மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்து அரசு பேருந்து ஒட்டுநர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் வழக்கு பதிவு செய்து  சுமை ஆட்டோ ஒட்டுநர் சடையம்பட்டி நாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT