தஞ்சாவூர்

2,352 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

DIN


கும்பகோணம் ஸ்ரீராம் நகர் பகுதியில் அனுமதி இன்றி வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், கும்பகோணம் தாலுகா ஆய்வாளர் முருகவேல் தலைமையிலான போலீஸார் ஸ்ரீராம் நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, அப்பகுதியில் சிலர் அனுமதியின்றி வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மதுபானங்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த தலா 180 மி.லி. அளவு கொண்ட 2,352 மதுபாட்டில்கள் அடங்கிய 49 பெட்டிகள் மற்றும் 2 கேன்களில் அடைக்கப்பட்ட 110 லிட்டர் வெளி மாநில சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கிருந்த வட்டி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (63), இவரது மகன் வேல்முருகனை (33) போலீஸார் கைது செய்தனர். மேலும்,  2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT