தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் பள்ளியில் மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி 

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தக சுமையை

DIN

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தக சுமையை குறைத்து, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை உருவாக்கி, ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நல்லொழுக்கப் பயிற்சியளிக்கப்படுகிறது. 
இதில், பேச்சரங்கம், வினாடி~வினா, அறிவியல் படைப்பாற்றல் போட்டி, ஆரோக்கியம், மாணவர்கள் ஒழுக்கம், பாதுகாப்பு, வாகன விபத்து தடுப்பு,  சுற்றுச்சூழல் ஆகியன குறித்த திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறும். 
அதன்படி, மாணவர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி நிகழ்ச்சி பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ். முகமது ஆஜம் தலைமையிலும்,  பள்ளி முதல்வர் மீனாகுமாரி முன்னிலையிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் எம்.முகமது ஷகீல், எச்.ஆஷிக் அகமது,  ஏ.ஆர்.ரியாஸ் அகமது,  வி. சக்தி ஆனந்தம், 
பி. அப்துல் ரஹ்மான் ஆகியோர்  பல்வேறு தலைப்புகளில் பேசினர். நிறைவில்,  மாணவர்கள் பங்கேற்ற கூட்டு உடற்பயிற்சி நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT