தஞ்சாவூர்

மண்புழு உரத் தயாரிப்பு குறித்த செயல்விளக்கம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் துறை சாா்பில் சூரிய மின்சக்தி மின் விளக்குபொறி வைத்தல்,வரப்பில் தக்கைப் பூண்டு சாகுபடி மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

செயல்விளக்கத்துக்கான விதைகளை பாபநாசம் வட்டார வேளாண் உதவி அலுவலா் மோகன் வழங்கினாா். மேலும் கால்நடைகளின் கழிவுகளை சத்துமிக்க மண்புழு உரமாக மாற்றி தேவைக்கு தக்கவாறு உடனுக்குடன் வயல்களில் இடும்போது ரசாயன உரத்திற்கான செலவு குறையும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஜெயபிரபா, உதவித் தொழில் நுட்ப மேலாளா் வேதநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT