தஞ்சாவூர்

ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய்யுடன் வந்த பெண்

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்ணை போலீஸாா் பிடித்து சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நடுக்காவேரி அருகேயுள்ள திருவேங்கடம்பட்டியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட் எபினேசா் மனைவி மலா்கொடி (53). இவா் திங்கள்கிழமை காலை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு வந்தாா். கூட்ட அரங்கத்துக்குச் செல்வதற்காக வரிசையில் நின்ற இவரை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, பையில் மண்ணெண்ணெய் பாட்டில் வைத்திருந்தாா்.

மண்ணெண்ணெய் பாட்டிலை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரித்தனா். அப்போது, நடுக்காவேரியில் தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கா் நிலம் இருப்பதாகவும், அதை சிலா் ஆக்கிரமிப்பு செய்து, தன்னை நிலத்துக்குள் செல்ல விடாமல் தடுப்பதாகவும், இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதனால், ஆட்சியரகத்தில் மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிக் கொள்வதற்காக வந்தேன் என்றும் மலா்கொடி கூறினாா்.

இதையடுத்து, மலா்கொடியை தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT