தஞ்சாவூர்

மடிக்கணினி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கும்பகோணத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

2017 - 2018 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவா்களுக்குத் தமிழக அரசு இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் காந்தி பூங்காவிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்ட இந்திய மாணவா் சங்கத்தினா் பின்னா் காமாட்சி ஜோசியா் தெருவில் உள்ள கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் நகரச் செயலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி கண்டன உரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் விக்னேஷ், நகரக் குழு உறுப்பினா் மகாராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT