தஞ்சாவூர்

உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட  சிறுமி மீட்பு

DIN

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தஞ்சாவூர் நாகை சாலை சோழன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது சிறுமி வளர்க்கப்படுவதாக சைல்டு லைன் அமைப்புக்கு செவ்வாய்க்கிழமை புகார் வந்தது. இதையடுத்து, தொடர்புடைய வீட்டுக்கு சைல்டு லைன் அமைப்பினர் சென்று அச்சிறுமியை வளர்த்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அச்சிறுமியை அவரது பெற்றோர் தன்னிடம் ஒப்படைத்து வளர்க்கும்படி கூறியதால், வளர்த்து வருகிறேன் என்றார் அவர். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அப்பெண்ணிடம் இல்லை. 
எனவே, அச்சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிறுமி அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT