தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதி கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

DIN

பட்டுக்கோட்டை பகுதி கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஏனாதி ராஜப்பா கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரிச் செயலர் பொ. கணேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வை. விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். இக்கல்லூரியில் உள்ள துறைகள் வாரியாக பேராசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பொங்கலிட்டு விவசாயத்திற்கு உதவிடும் சூரியனுக்கும், ஏர், காளைகளுக்கும் பொங்கலை படையலிட்டுக் கொண்டாடினர். இதேபோல், சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய பெருமையை நிலைநிறுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்ற பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள்  உள்ளிட்ட அனைவருக்கும் சர்க்கரைப்  பொங்கல் வழங்கப்பட்டது. பள்ளித் தாளாளர் டி.சுவாமிநாதன், செயலர் ஜெ. சரவணன்,பள்ளி இயக்குநர்கள் எம்.ராமையா,  சி.கோபாலகிருஷ்ணன், எம்.ரெத்தினகுமார், எஸ்.ராஜமாணிக்கம், சி.மோகன், மருத்துவர்கள்  கெளசல்யா  ராமகிருஷ்ணன், கே.கண்ணன், கே.பிரசன்ன வெங்கடேஷ், தலைமையாசிரியர்கள் ஏ.முகமது அக்பர் அலி, கே.கெளசல்யா, ஜெயசித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT