தஞ்சாவூர்

கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக - அமமுகவினர் இடையே தகராறு

DIN


கும்பகோணம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுக -அமமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. 
கும்பகோணம் அருகிலுள்ள உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவின்போது, உடையாளூர் அண்ணாநகரைச் சேர்ந்த மூதாட்டி பூபதி (70) வரிசையில் நின்றார். அப்போது, இவரது வாக்குச்சீட்டை சிலர் பறித்து, வாக்களித்தனர். இதுகுறித்து அமமுக நிர்வாகிகளிடம் பூபதி முறையிட்டார். 
இதைத்தொடர்ந்து, கள்ள வாக்குகள் பதிவு செய்ததாக அதிமுகவினரும், அமமுகவினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 
இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் கற்களை வீசினர். இதனால் போலீஸார் கூட்டத்தினரை கலைத்தனர். இதையடுத்து,  தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தேர்தல் அலுவலர் தமிழ்ச்செல்வி தெரிவித்து, அதற்கான அறிவிப்பாணையை சங்க வாயிலில் ஒட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT