தஞ்சாவூர்

குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN


கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் நகராட்சி 2-வது வார்டுக்குள்பட்ட கொட்டையூர் தோப்புத்தெருவில் பல நாட்களாகக் குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவுக்குச் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை வட்டாட்சியர் செல்வம் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம் - திருவையாறு சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT