தஞ்சாவூர்

சாமியப்பா கூட்டுறவு நிலையத்தில் பட்டயப்படிப்பு சேர்க்கை

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2019 - 20 ஆம் ஆண்டுக்கான முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுகிறது. 
இதுகுறித்து சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ரமணி மேலும் தெரிவித்திருப்பது: 
இந்நிலையத்தில் பட்டயப் பயிற்சியில் ஒரே சமயத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பட்டயச் சான்றிதழ், கணினி மேலாண்மை பட்டயச் சான்றிதழ், நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் பட்டயச் சான்றிதழ் ஆகிய மூன்று பட்டயச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன. 
இப்பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இப்பயிற்சியில் பட்டதாரிகளும் சேரலாம். 
1.6.2019 அன்று குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.  
தகுதியுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு அரசுக் கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படுகிறது. 
எனவே, கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362 - 238253, 237426 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT