தஞ்சாவூர்

வாக்காளர், தனி நபர் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும்

DIN


மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவன்று வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தனிநபர் அடையாள அட்டையை வாக்காளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ.  அண்ணாதுரை.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம், மேலதிருப்பந்துருத்தி, மேற்கு சங்கரகுளம், புதுகாலனி, அற்புதமாதா தெரு, நடுக்காவேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களை சனிக்கிழமை பார்வையிட்ட ஆட்சியர், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலையிலுள்ள ஆதிதிராவிடர் புது தெருவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஆட்சியர் அண்ணாதுரை ஏற்படுத்தினார். 
தில்லைஸ்தானம் ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிட்ட ஆட்சியர்,  வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருச்செனம்பூண்டி வடக்குத் தெரு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 
இதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறும் போது,  வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டை, தனி நபர் அடையாள அட்டையையும் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
முன்னதாக, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆலோசனைகளை மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  ரவி மனோகர், தஞ்சாவூர், திருவையாறு மற்றும் பூதலூர் வட்டாட்சியர்கள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT