தஞ்சாவூர்

மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்

DIN

தஞ்சாவூரில் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவையின் மாதாந்திர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைவர் ஆதிநெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.  பொதுச்செயலாளர் அக்ரி செல்வராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். தஞ்சை புதிய மற்றும் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைத்து உரிய காவலர்களை மாநகராட்சி நிர்வாகம் நியமிக்க வேண்டும். தஞ்சை மாநகர பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை பரிசீலனை செய்து வரியை குறைக்க வேண்டும். 
தஞ்சை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பயணிகள் அமருவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து பழநிக்கு புதிய ரயில்விட வேண்டும். பொள்ளாட்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, துணைத் தலைவர் திருமலை வரவேற்றார். நிறைவில்,  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்தர்தாஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT