தஞ்சாவூர்

கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்

பங்குனி பெருந்திருவிழாவையொட்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூரில் அரசாபவிமோசன பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

பங்குனி பெருந்திருவிழாவையொட்டி, தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூரில் அரசாபவிமோசன பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 19 நாள்கள் பங்குனிப் பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதேபோல, நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வாகனப் புறப்பாடு, கருட சேவை நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில், காலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரசாப விமோசன பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர், மேளதாளத்துடன் நான்கு வீதிகளில் தேர் வலம் வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயிலில் மார்ச் 28-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT