தஞ்சாவூர்

கண்கள் தானம்

DIN

பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை  மேலக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி விநாயகத்தேவர் (88).  இவர் வயது மூப்பு காரணமாக  செவ்வாய்க்கிழமை காலமானார். 
இந்நிலையில், அவரது மனைவி ராஜலெட்சுமி,  மகன்கள் ஜோதி,  ராமலிங்கம்,  சுப்பிரமணியன்,  மகள்கள் பாலசுந்தரி,  ஞானோதயம்,  கமலா ஆகியோர் விநாயகத் தேவர் விருப்பப்படி அவரது கண்களை தானம் செய்ய முன்வந்தனர்.
தகவலறிந்த அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.முகமது அப்துல்காதர் மற்றும் நிர்வாகிகள் தம்பிக்கோட்டை  மேலக்காடு சென்று,   இறந்த விநாயகத் தேவரின் இரு கண்களையும் தானமாகப் பெற்று, அவற்றை கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பிவைத்தனர். இதற்காக விநாயகத் தேவரின்  குடும்பத்தினருக்கு அதிரை லயன்ஸ் சங்கத்தினர் நன்றி கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT