தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

கும்பகோணத்தில் வியாழக்கிழமை தடைசெய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அலுவலர்கள்  பறிமுதல் செய்தனர். 
கும்பகோணம் பட்டம் சந்து மற்றும் காமாட்சி ஜோசியர் தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் அனுமதியின்றி உற்பத்தி செய்து வருவதாக நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில்,  நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், மணிகண்டன், டேவிட் பாஸ்கரராஜ், முருகானந்தம், அருள்தாஸ் ஆகியோர் திடீரென பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இரு நிறுவனங்களிலும் வியாழக்கிழமை சோதனையிட்டனர்.
அப்போது,  பட்டம் சந்தில் உள்ள நிறுவனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களான கப்புகள், தட்டுகள் போன்ற பொருட்களைப் பறிமுதல் செய்து, அந்நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.
இதேபோல, காமாட்சி ஜோசியர் தெருவிலுள்ள நிறுவனத்திலிருந்த பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இரு நிறுவனங்களிலும் 5 டன் எடையுள்ள ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT