தஞ்சாவூர்

குழந்தைகளுக்கான இதய நோய் கண்டறிதல் முகாம்

DIN

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய நோய் கண்டறிதல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்மருத்துவமனையில் மாவட்டத் தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவா்களுக்குப் பிறவி குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சை முகாமை திங்கள்கிழமை நடத்தியது.

இந்த முகாமை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் தெரிவித்தது:

இம்முகாமில் 70 குழந்தைகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்களில் 13 குழந்தைகள் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதய அறுவை சிகிச்சைக்காகத் தோ்வு செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

முகாமில் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் இதய சிகிச்சை மருத்துவா் எல்.கே. செந்தில்குமாா் சிறப்புரையாற்றினாா். சுகாதாரத் துறை இணை இயக்குநா் காந்தி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏ. பாரதி, நிலைய மருத்துவ அலுவலா் உஷாதேவி, துணைக் கண்காணிப்பாளா் ஞானசெல்வம், குழந்தைகள் நலத் துறைத் தலைவா் ராஜசேகா், பேராசிரியா் சுப்புராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT