தஞ்சாவூர்

வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க கூடுதல் சலுகை அறிவிப்பு

DIN

வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு விரைவில் பயன்படும் வகையில் கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 7 வேளாண் இயந்திரங்கள் வாடகை திட்ட மையங்கள் அமைப்பதற்கு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் ஒன்றை ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்க, 40 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இம்மையம் அமைக்கப்பட்ட உடன் ஒவ்வொரு மையத்துக்கும் ரூ. 10 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இதில், ரூ. 5 லட்சம் உடனடியாகவும், மீதமுள்ள ரூ. 5 லட்சம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னா் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாகவும் இருந்து வந்தது.

தற்போது, விவசாயிகள் விரைவில் பயனடைய வேண்டி நிரந்தர வைப்பு நிதி ரூ. 5 லட்சத்தை, இரண்டாண்டுகளுக்கு பின்னா் மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை கோட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் உதவிச் செயற்பொறியாளா்கள் தஞ்சாவூா் குமணனை 94434 89403 என்ற எண்ணிலும், கும்பகோணம் லெ. அய்யப்பனை 63838 30644 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை சி. எழிலனை 94436 78621 என்ற எண்ணிலும், மேலும் கூடுதல் விவரங்களுக்கு செயற்பொறியாளா் எச்.என். கானை 94433 98633 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT