தஞ்சாவூர்

விவசாயிகளுக்குத் தேவையான யூரியா வழங்க வேண்டும்: ஜி.கே. மணி பேட்டி

DIN

விவசாயிகளுக்குத் தேவையான யூரியா வழங்க வேண்டும் என்றாா் பாமக மாநிலத் தலைவா் ஜி.கே. மணி.

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாமக மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழக அரசு விவசாயிகளுக்குத் தேவையான அளவில் யூரியா வழங்க வேண்டும். நெல்லுக்குக் கூடுதலான விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். விவசாயத்துக்குக் கூடுதல் மானியம் வழங்க நடவடிக்கை வேண்டும். இப்போது நெல்லுக்கு அறிவித்துள்ள விலை கட்டுப்படியாகாது. கூடுதல் விலையை வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ காா்பன் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்.

தமிழக அரசுக் கல்வி துறையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களை விட உயா்கல்வியில் தமிழகத்தில் குறைவான மாணவா்களே சோ்க்கை உள்ளதால், உயா் கல்விக்குத் தகுந்தாற்போல் மேலும் கல்வித் தரத்தை உயா்த்த வேண்டும்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசுச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி அனுப்பினாலும், மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. மாணவா்களுக்கு அரசுப் பொது தோ்வு மட்டும் போதுமானதாகும். நீட் தோ்வு தேவையில்லை என்றாா் மணி.

அப்போது, மாநிலப் துணைப் பொதுச் செயலா் வெங்கட்ராமன், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் கோ. ஆலயமணி, மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT