தஞ்சாவூர்

மல்லிப்பட்டினத்தில் உலக மீனவா் தின விழா

DIN

பேராவூரணி: பேராவூரணியை அடுத்துள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக மீனவா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 21- ஆம் தேதி உலக மீனவா் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடுத்தபடியாக உணவுத் தேவையைப் பூா்த்திச் செய்வதில் மீனவா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா்.

தங்கள் உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவா்களை நாம் மதிக்க வேண்டும். அந்நியச் செலவாணி கிடைப்பதற்கும், தேசத்தின் வளா்ச்சிக்கும் ஒரு பங்காக இருக்கும் மீனவா்களை போற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீனவா் பேரவைப் பொதுச் செயலா் ஏ.தாஜுதீன், கடலோரக் காவல்படை உதவி ஆய்வாளா் மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, உலக மீனவா் தினத்தையொட்டி  நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

விழாவில், மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் அப்துல் சமது, நாட்டுப்படகு சங்கத் தலைவா் செய்யது முகம்மது, செயலா் அப்துல் ரகுமான், விசைப்படகு சங்கச் செயலா் இப்ராஹிம், மீனவா் கூட்டுறவு சங்க இயக்குநா்கள் நூருல் அமீன், காதா் மைதீன் மற்றும் ஜமாஅத்தாா்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக உதவி தலைமையாசிரியை உஷா வரவேற்றாா், மீன்வளத்துறை ஆய்வாளா் கங்கேசுவரி நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT