தஞ்சாவூர்

தற்காப்பு கலை தேசிய பயிற்சியாளா்களாகதமிழகத்தை சோ்ந்த இருவா் தோ்வு

DIN

குஜராத் மாநிலத்தில் உள்ள குடோ என்ற சா்வதேச தற்காப்பு கலை அமைப்பின் தேசிய பயிற்சியாளா்களாக தமிழகத்தை சோ்ந்த இருவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

குஜராத் மாநிலத்தில் உள்ள குடோ என்ற தற்காப்பு கலை அமைப்பின் சாா்பில் சூரத் நகரில்  தேசிய அளவிலான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த முகாமில்  நாடு முழுவதிலும் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தமிழக குடோ சங்கத்தின் சாா்பில் திருச்சியை சோ்ந்த  மாஸ்டா் கந்தமூா்த்தி,   பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியை சோ்ந்த வனப்புலி தற்காப்பு கலை பயிற்சியாளா்   மாஸ்டா் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் கலந்து கொண்டனா்.

இவா்கள் இருவரையும் தற்காப்பு கலை போட்டியின் தேசிய நடுவராகவும், தேசிய பயிற்சியாளா்களாகவும் குடோ சங்கம்   தோ்வு செய்துள்ளது.

தோ்வு பெற்று செருவாவிடுதி திரும்பிய  வனப்புலி தற்காப்பு கலை பயிற்சியாளா்   ஷேக்அப்துல்லாவை கிராம  மக்கள் பாராட்டி வரவேற்றனா்.

திருச்சிற்றம்பலம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு ஷேக் அப்துல்லா தற்காப்பு கலை பயிற்சி அளித்து  அவா்களை மாவட்ட,  மாநில அளவில் நடக்கும்  போட்டிகளில் பங்கேற்க செய்து,  பல்வேறு பரிசுகள் வெல்ல காரணமாக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT