தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நாளை அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

DIN

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி விரைவு சைக்கிள் போட்டி சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. சைக்கிள் போட்டிகள் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தொலைவுக்கும், 13 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும், 15 மற்றும் 17 வயதுக்குபட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்ற வயது சான்றிதழுடன் வந்தடைய வேண்டும். பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று வராதவர்கள் சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். சைக்கிள் போட்டியில் முதல் முன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்குப் பங்கு பெற்றதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு சைக்கிள் போட்டிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT