தஞ்சாவூர்

சாந்தாங்காட்டில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

DIN


பட்டுக்கோட்டையை அடுத்த  சாந்தாங்காடு கிராமத்தில் மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த  சுமார் 400 மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் வீரமணி,  பார்த்தசாரதி, ரவிச்சந்திரன் ஆகியோர் குடற்புழு நீக்கம், மலடு நீக்கம் ஆகியவற்றுக்கான சிகிச்சையளித்து, இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினர். மேலும், பல மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது. சிறப்பாக பராமரிக்கப்படும்  கால்நடைகளின் உரிமையாளர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
நிகழ்ச்சிக்கு, மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் என். நடராஜன் தலைமை வகித்தார். மண்டல துணை ஆளுநர் ஆர். ஜெயவீரபாண்டியன் முன்னிலை வகித்தார். சங்கப் பொருளாளர் சீதாராமன், உறுப்பினர்கள் ராஜப்பா, கல்யாணகுமார், எம்.எஸ்.செல்வராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில், ரோட்டரி மண்டலச் செயலர் ஆர். அண்ணாதுரை வரவேற்றார். நிறைவில், மனோரா ரோட்டரி சங்கச் செயலர் சிவ.சரவணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT