தஞ்சாவூர்

திருவிசைநல்லூர் கோயிலில் வரமிளகாய் யாகம்

DIN


கும்பகோணம் அருகே திருவிசைநல்லூரில் உள்ள பஞ்சமுக மகாமங்கல ப்ரித்தியங்கிரா தேவி கோயிலில் மஹாளய அமாவாசையையொட்டி வர மிளகாய் யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிசைநல்லூரில் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ பஞ்சமுக மகா மங்கல ப்ரித்தியங்கிராதேவி அருள்பாலிக்கிறார். தமிழகத்தில் தனிச் சிறப்பான எங்கும் காணமுடியாத பஞ்சமுகத்துடன் ஸ்ரீ ப்ரித்தியங்கராதேவி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இக்கோயிலில் ஒவ்வொரு மஹாளய அமாவாசையன்று நிகும்பலா மஹாயாகம், பட்டு புடவை யாகம், மிளகாய் யாகம் நடைபெறும். இதன்படி, சனிக்கிழமை நிகும்பலா மஹாயாகம், பட்டு புடவை யாகம், மிளகாய் யாகம் நடைபெற்றது.  
இதில், பக்தர்கள் தாங்கள் வேண்டும் வரங்களை சங்கல்பம் செய்து வர மிளகாய் முடிச்சு வைத்து வேண்டியும், திருமண வரம் வேண்டியும், புத்ர பாக்கியம் வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், வியாபார ஸ்தாபனம் நல்ல லாபம் கிடைக்க வேண்டியும், வழிபட்டனர். மேலும், யாக குண்டத்தில் பக்தர்கள் மிளகாய்களை போட்டனர். இந்த மிளகாய் யாகத்தில் சிறு நெடி கூட ஏற்படாதது இதன் சிறப்பம்சம்.
இதைத் தொடர்ந்து பட்டுப்புடவைகள் யாக குண்டத்தில் போட்டு யாகம் நடத்தப்பட்டது. இதில், ஸ்ரீ பிரித்தியங்கிராதேவி கோயில் உபாஸினி நந்தினி கணேஷ், குமார் குருக்கள், ஆகம பிரவீணர் சிவ ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி கோயில் உபாஸகர் கணேஷ்குமார் குருக்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT