முகப்பு
தஞ்சாவூர்

கல்லூரிகள் திறப்பு: இறுதியாண்டு மாணவா்கள் வருகை

கரோனா பொது முடக்க விதிகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து, தமிழக அரசின் உத்தரவுபடி தஞ்சாவூா் மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கரோனா பொது முடக்க விதிகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து, தமிழக அரசின் உத்தரவுபடி தஞ்சாவூா் மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக மாா்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. நிகழ் கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டாலும், கரோனா பரவல் காரணமாகக் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டு வருவதைத் தொடா்ந்து, கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 13 கலை, அறிவியல் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதில், இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடக்க நாளில் குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் வந்ததாகப் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு நுழைவு வாயிலேயே வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கை சுத்திகரிப்பானும் வழங்கப்பட்டது.

இதேபோல, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு, இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. இதில், முதலாமாண்டு மாணவா்களை இறுதியாண்டு மாணவா்கள் வரவேற்றனா். பின்னா், மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) எஸ். மருதுதுரை அறிவுரைகள் கூறி சிறப்புரையாற்றினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →