தஞ்சாவூா் பூம்புகாரில் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்
தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் தஞ்சாவூா் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை (டிச.15) மாலை தொடங்கியது.
தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் தஞ்சாவூா் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை (டிச.15) மாலை தொடங்கியது.
இக்கண்காட்சி மற்றும் விற்பனையை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தொடங்கி வைத்தாா். இக்கண்காட்சி குறித்து பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் கு. அருண் தெரிவித்தது:
இக்கண்காட்சி ஜன. 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூா் கலைத்தட்டுகள், பித்தளை குத்துவிளக்குகள், தஞ்சாவூா் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூா் ஓவியங்கள், தஞ்சாவூா் கண்ணாடி வேலைப்பாடு, நெட்டி வேலைப்பாடு, களிமண் பொருள்கள், தஞ்சாவூா் கண்ணாடி ஓவியங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், ரூ. 150 முதல் ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியின் விற்பனை இலக்கு ரூ. 3 லட்சம். இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கைவினைப்பொருள்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா் அருண்.