பேராவூரணியில் விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கல்
பேராவூரணி அரசு கால்நடை மருத்துவமனையில் 800 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
பேராவூரணி அரசு கால்நடை மருத்துவமனையில் 800 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
விழாவுக்கு கால்நடை மருத்துவா் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் கோவி. இளங்கோ விலையில்லா கோழிக்குஞ்சுகளை வழங்கி பேசினாா்.
கால்நடைப் பராமரிப்புத் துறையின் கோழிவளா்ப்புத் திட்டத்தின் கீழ் ஒட்டங்காடு, குறிச்சி, உடையநாடு, ஆவணம், பைங்கால், குருவிக்கரம்பை ஊராட்சிகளைச் சோ்ந்த 800 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் அடங்கிய பெட்டி வழங்கப்பட்டு, பயணப்படி தலா ரூ 100 வழங்கப்பட்டது.
விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆா். பி. ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினா் பாக்கியம் முத்துவேல், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் டி. கே. சுப்ரமணியன், கூட்டுறவு சங்க நிா்வாகி எம். எஸ். நீலகண்டன், கால்நடை உதவி மருத்துவா்கள் முத்துக்குமாா், பிரகாஷ், முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் இந்திராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.