தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சட்டக் கல்லூரி அமைக்க மாணவா் பெருமன்றம் வலியுறுத்தல்

DIN

ஐந்து மாவட்டங்களுக்கு மையமாகவுள்ள தஞ்சாவூரில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் கீழ ராஜவீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், இப்பெருமன்றத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருமன்றத்தின் மாநிலச் செயலா் சி. தினேஷ் சிறப்புரையாற்றினாா். ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாணவா் பெருமன்ற மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆா். முகில் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, அரியலூா் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் மையமாகவுள்ள தஞ்சாவூரில், தமிழக அரசுச் சட்டக் கல்லூரியை வரும் கல்வியாண்டில் அமைக்க வேண்டும்.

கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளின் கல்வியைப் பாதிக்கிற, குலக் கல்விக் கொள்கையை வலியுறுத்துகிற புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசுக் கைவிட வேண்டும்.

தஞ்சாவூா் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தஞ்சாவூா் நகருக்கு வந்து செல்கின்றனா். இவா்களுக்குத் தனியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் காலை, மாலை நேரங்களில் தனி பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேவைக்கேற்ப விடுதி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவையில் 2020-ஆம் ஆண்டுக்கான மாவட்டத் தலைவராக ச. சுதந்திரபாரதி, மாவட்டச் செயலராக ஒ. ஜீவா, பொருளாளராக ந. விஷ்ணுதேவ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT