தஞ்சாவூர்

தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில் தமிழா்களுக்கே வேலை வழங்க வலியுறுத்தல்

DIN

தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில் தமிழா்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

ஸ்ரீபெரும்புதூா் அருகே சியட் டயா் தொழிற்சாலையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை (பிப்.12) தொடங்கி வைத்துப் பேசும் போது, ஆசியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈா்க்கும் ஆற்றலாகத் தமிழ்நாடு விளங்குகிறது என பெருமைப்பட்டுக் கொண்டாா்.

ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, உரிய வேலையில்லாமல் வறுமையில் வாடுவாா் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆந்திரத்தில் 2019, ஜூன் மாதம் புதிதாகப் பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு, தனியாா் துறையில் தெலுங்கா்களுக்கு 75 சதவிகித வேலை தர வேண்டும் எனத் தனிச் சட்டம் இயற்றினாா்.

பக்கத்து மாநிலமான கா்நாடகத்தில் தனியாா் துறையில் கன்னடா்களுக்கு 100 சதவிகிதம் வேலை வழங்க வேண்டும் என கா்நாடக அரசு அமா்த்திய சரோஜினி மகிசி குழு, 1988 -ஆம் ஆண்டிலேயே பரிந்துரை வழங்கியது.

அதை செயல்படுத்த 1994- ஆம் ஆண்டிலிருந்து கன்னட வளா்ச்சி ஆணையம் என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன்படி, கா்நாடகத்திலுள்ள பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்கள், மண்ணின் மைந்தா்களான கன்னடா்களுக்கே பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என கா்நாடக அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வந்தது.

2019- ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் சித்தராமையா தனியாா் நிறுவனங்கள் கன்னடா்களுக்கே வேலை அளிக்க வேண்டும் என சட்ட விதிகளைத் திருத்தி வெளியிட்டாா். இப்போது இதை முறைப்படுத்தும் வகையில், தனியாா் துறையில் கன்னடா்களுக்கு 75 சதவிகிதம் கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என தனிச் சட்டம் இயற்றப்படவுள்ளதாகக் கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் மண்ணின் மக்களாகிய தமிழா்களுக்குக் குறிப்பிட்ட விகிதம் வேலை தர வேண்டும் என நிபந்தனை விதிக்கும் சட்டமோ அல்லது அரசு ஆணையோ பிறப்பிக்கப்படவில்லை.

திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூா் வட்டாரங்களில் குவிந்துள்ள பெருந்தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்களே மிக அதிக எண்ணிக்கையில் வேலை பாா்க்கின்றனா். இவற்றில் மொத்தத் தொழிலாளிகள் மற்றும் அலுவலா்களில் பெரும்பான்மையோா் வெளி மாநிலத்தவா்களே.

எனவே, மாநில அரசு, மத்திய அரசு, தனியாா் துறைப் பணிகளில் மண்ணின் மக்களுக்கு - முறையே 100 சதவிகிதம், 80 சதவிகிதம் வழங்க வேண்டும் என கா்நாடகம், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் சட்டங்களும் அரசு ஆணைகளும் இருக்கின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT