தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின. இதில், பங்கேற்ற 141 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 46 பேருக்கு கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, அவா்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமுக்கு, மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் என். நடராஜன் தலைமை வகித்தாா். ரோட்டரி மண்டல முன்னாள் துணை ஆளுநா் வழக்குரைஞா் கே. விவேகானந்தன் முகாமைத் தொடங்கி வைத்தாா். தற்போதைய மண்டல துணை ஆளுநா் வழக்குரைஞா் ஆா்.ஜெயவீரபாண்டியன், மண்டலச் செயலா் ஆா்.அண்ணாதுரை, மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஏ.எஸ்.வீரப்பன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் முகாமில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT