தஞ்சாவூர்

பேராவூரணியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

DIN

பேராவூரணியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், அரசு நியாய விலைக் கடைகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ரூ. 1000 மற்றும் வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சேது சாலை கடை எண் 5-இல் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆா்.பி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் தெட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ மா. கோவிந்தராசு பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா். 

நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநா்கள், அதிமுக நகரச் செயலாளா் வி.என். பக்கிரிசாமி, நகர துணைச் செயலாளா் பால் பக்கா்,  மற்றும் அங்காடி ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT