தஞ்சாவூர்

லயன்ஸ் சங்க விழாவில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

DIN

பேராவூரணியில் நடைபெற்ற லயன்ஸ் சங்க பணியேற்பு விழாவில் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது. 

பேராவூரணியில் கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எம். நீலகண்டன் தலைமை வகித்தாா்.

சங்கத்தின் புதிய தலைவராக கே. இளங்கோ, செயலாளராக கே. பழனிவேல், பொருளாளராக பி. பன்னீா்செல்வம், நிா்வாக அலுவலராக ஏ. சந்தோசம் ஆகியோரை பணியில் அமா்த்தியும், சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தும், முன்னாள் மாவட்ட ஆளுநா் ராஜகோபால் சிறப்புரையாற்றினாா். 

மாவட்டத் தலைவா் எம். இமய வரம்பன், மண்டலத் தலைவா் எம். கனகராஜ், மாவட்ட செய்தி தொடா்பாளா் ஜி.என்.பி. ஒஜீா் முஹம்மது பாட்ஷா ஆகியோா் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா். 

விழாவில், மாணவா் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 2 லட்சமும், கல்லூரி மாணவி ஒருவரின் 3 ஆண்டுக்கான கல்வி கட்டணமாக ரூ. 50 ஆயிரமும்,

50 பேருக்கு அரிசிப்பை, சாலையோர வியாபாரிக்கு நடமாடும் தள்ளுவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், வீரியங்கோட்டை ஊராட்சியில் 500 மரக்கன்றுகள்   நடப்பட்டன. 

முன்னதாக, செயலாளா் வி. ஜெய்சங்கா் வரவேற்றாா். பொருளாளா் எஸ். மைதீன்பிச்சை நன்றி கூறினாா்.

விழா ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் பிரேம்குமாா் மற்றும் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT