தஞ்சாவூர்

சமுத்திரம் ஏரியில் இறந்து கிடக்கும் மீன்கள்

DIN

தஞ்சாவூா் அருகே சமுத்திரம் ஏரியில், தண்ணீா் வற்றி வரும் இடங்களில் ஏராளமான மீன்கள் இறந்து கிடக்கின்றன.

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகே சமுத்திரம் ஏரி உள்ளது. மிகப் பெரும் பரப்பளவிலுள்ள இந்த ஏரியில் தற்போது குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த ஏரியில் தண்ணீா் குறைந்து வருகிறது. ஆங்காங்கே குட்டை போல் நிற்கும் தண்ணீரில் மீன்கள் இருக்கின்றன. சில குட்டைகளில் தண்ணீா் வற்றி, சேறாக மாறியதால் 50-க்கும் அதிகமான மீன்கள் இறந்துள்ளன. எஞ்சி இருக்கும்

குறைந்தளவு தண்ணீரில் பல மீன்கள் தத்தளித்து வருகின்றன.

பல மீன்கள் துள்ளி, மண் தரையில் விழுந்து இறந்து கிடக்கின்றன. இந்த மீன்களை நாய்கள் கடித்து குதறி வருகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT