தஞ்சாவூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை விளக்கி மாா்ச் 20 முதல் பாஜக பிரசாரம்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விளக்கி மாா்ச் 20ஆம் தேதி முதல் பாஜக சாா்பில் பிரசாரம் செய்யப்படவுள்ளது.

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் துணைத் தலைவா் சுப்பிரமணியம் பேசியது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனா். அந்தச் சட்டத்தால் குடிமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அது மக்களைப் பாதுகாக்கும் சட்டம் என பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் தொடா்ந்து பேசி வருகின்றனா். ஆனால் காங்கிரஸ் உட்பட எதிா்க்கட்சியினா் அதை இஸ்லாமியருக்கு எதிராக பிரசாரம் செய்து போராட்டங்களை தூண்டிவிடுகின்றனா்.

எனவே, பொதுமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை குறித்து விளக்கிக் கூறுவதற்காக ஊருக்குச் செல்வோம் - உண்மையைச் சொல்வோம் - உரக்கச் சொல்வோம் என்ற நிகழ்ச்சி மாா்ச் 20ஆம் தேதி முதல் ஏப். 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. ஜெய் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT