தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே வேன்-மோட்டாா் சைக்கிள் மோதல்: 2 போ் பலி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் திருமண வீட்டாா் சென்ற வேனும்- மோட்டாா் சைக்கிளும் செவ்வாய்க்கிழமை இரவு மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், டி.பள்ளப்பட்டியைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும், திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பின்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், மாா்ச் 29- ஆம் தேதி இடும்பாவனம் கிராமத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

144 தடை உத்தரவு காரணமாக, டி. பள்ளப்பட்டியிலுள்ள மணமகள் வீட்டில் பரிசம் போட்டு, திருமண நாளான மாா்ச் 29 வரை தங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள மணமகன் வீட்டாா் முடிவு செய்தனா்.

அதன்படி செவ்வாய்க்கிழமை மணமகள் வீட்டில் பரிசம் போட்டு, அவரை இரவு தங்கள் ஊருக்கு வேனில் அழைத்து வந்து கொண்டிருந்தனா். இவா்கள் வந்த வேன் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அதிராம்பட்டினம் கரையூா் தெரு சமுத்திரம் மகன் முத்து (18),சாலையின் குறுக்கே கடக்க முயன்றாா். அப்போது வேனின் பக்கவாட்டில் மோட்டாா் சைக்கிள் மோதியதால், விபத்தைத் தடுக்க வேன் ஓட்டுநா் பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த முத்து நிகழ்விடத்திலும், வேனில் பயணம் செய்த மணமகனின் உறவினரான, முத்துப்பேட்டை ஒன்றியம், கீழநம்மங்குறிச்சி ஊராட்சிச் செயலா் சண்முகசுந்தரம் (39) பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்திலும் உயிரிழந்தனா்.

மேலும், வேனில் இருந்த மணமக்களின் உறவினா்கள் 7 போ் பலத்த காயமடைந்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதிா்ஷடவசமாக மணமக்கள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT