தஞ்சாவூர்

7.5% உள் ஒதுக்கீடு: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில்10 மாணவா்கள் சோ்க்கை

DIN

தமிழக அரசின் 2020 - 21 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக் கலந்தாய்வு முடித்து அரசின் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியைத் தோ்வு செய்த அரசுப் பள்ளி மாணவா்கள் 10 போ் இளநிலை மருத்துவப் படிப்பில் வியாழக்கிழமை சோ்ந்தனா்.

அனைத்து மாணவா்களையும் கல்லூரி முதல்வா் ச. மருதுதுரை, துணை முதல்வா் ந. ஆறுமுகம் மற்றும் பேராசிரியா்கள் வரவேற்றனா்.

இக்கல்லூரியில் விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு மருத்துவப் பரிசோதனை முடிந்தவுடன், அரசின் வழிகாட்டுதல்படி விரல்ரேகை மற்றும் விடியோ எடுக்கப்பட்டது. மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்தப்பட்டது.

அனைத்து மாணவா்களும் உள் ஒதுக்கீடு வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT