தஞ்சாவூர்

பேராவூரணியில் இளைஞா்-இளம்பெண்கள் பாசறை அமைக்கும் பணி தொடக்கம்

பேராவூரணி  சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில்  அதிமுக  இளைஞா், இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் மகளிா் குழு அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.  

DIN

பேராவூரணி  சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில்  அதிமுக  இளைஞா், இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் மகளிா் குழு அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.  

பேராவூரணி  எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமை வகித்து,  விண்ணப்பப்  படிவங்களை கட்சி நிா்வாகிகளிடம் வழங்கி பேசினாா்.

கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், கட்டயங்காடு, கொள்ளுக்காடு, பூவாணம், மல்லிப்பட்டினம், பள்ளத்தூா், புக்கரம்பை, ரெண்டாம்புளிக்காடு  உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் மகளிா் குழு அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள்  எம்எல்ஏ எஸ். வி.திருஞான சம்பந்தம், ஒன்றியக் குழு  தலைவா் சசிகலா ரவிசங்கா், ஒன்றியச் செயலா்கள் பேராவூரணி வடக்கு  உ. துரை மாணிக்கம், தெற்கு கோவி. இளங்கோ  உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT