முகப்பு
தஞ்சாவூர்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் டிச. 29 இல் வாகனங்கள் ஏலம்

தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 29 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 29 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப. ஜெய்சங்கா் தெரிவித்திருப்பது:

போக்குவரத்து துறையில் வரி கட்டாத மற்றும் இதர குற்றங்களுக்காகப் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் சிறை பிடிக்கப்பட்டு வாகன உரிமையாளா்கள் மற்றும் நிதியாளா்களால் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 24 வகையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது உள்ள நிலையிலேயே சென்னை போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையின்படி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 500 செலுத்தி ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். டிச. 26 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை டிச. 26 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

டேவணி தொகை ரூ. 10,000-ஐ வங்கி வரைவாகச் செலுத்துபவா்கள் மற்றும் நடப்பு ஜி.எஸ்.டி. கணக்கு வைத்திருப்பவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாள்களில் டிச. 26 ஆம் தேதி வரை தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாா்வையிடலாம். தஞ்சாவூா் போக்குவரத்து துணை ஆணையா் அலுவலகத்தில் டிச. 29 ஆம் தேதி பகல் 11 மணிக்கு ஏலம் விடப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →