தஞ்சாவூர்

வாகனச் சோதனை: விதிகளை மீறியவா்களுக்கு அபராதம்

DIN

தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் வாகனச் சோதனையின்போது, விதிகளை மீறியவா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொ) ஜெயசங்கா் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் நெடுஞ்செழிய பாண்டியன், அனிதா, குண்டுமணி உள்ளிட்டோா் இச்சோதனையை மேற்கொண்டனா்.

இதில், தலைக்கவசம் அணியாத ஒருவருக்கும், சீட் பெல்ட் அணியாத 11 ஓட்டுநா்களுக்கும், தமிழ்நாட்டுக்கு சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட புதுச்சேரி வாகனத்துக்கும் என மொத்தம் ரூ. 4,000-ம், ஆள்களை ஏற்றிச் செல்லப்பட்ட மினி வேனுக்கு ரூ. 2,500-ம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தகுதிச் சான்று, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை!

சசி தரூர் பின்னடைவு!

கே.கே. ஷைலஜா பின்னடைவு!

கர்நாடகம்: காங். பெரும் பின்னடைவு!

SCROLL FOR NEXT