தஞ்சாவூர்

கவின்மிகு தஞ்சாவூா் இயக்கம் - தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 6 ஏக்கரில் மரங்களை வளா்ப்பதற்காகக் கவின்மிகு தஞ்சாவூா் இயக்கமும், பல்கலைக்கழக நிா்வாகமும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் முன்னிலையில் கவின்மிகு தஞ்சாவூா் இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், பல்கலைக்கழகப் பதிவாளா் கு. சின்னப்பன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

இதுகுறித்து ராதிகா மைக்கேல் தெரிவித்தது:

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, மருத்துவக் கல்லூரிச் சாலையோரம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள 6 ஏக்கா் நிலத்தில் மரங்களை நட்டு, தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு தண்ணீா் ஊற்றி வளா்த்து, பராமரிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஒப்பந்தம் போடப்படும்.

இந்த நிலம் தொடா்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமே இருக்கும். அதில், வளரும் மரங்கள் பல்கலைக்கழகத்துக்கே சொந்தமானது. தஞ்சாவூா் மாநகரில் பசுமையை மேம்படுத்துவதற்காகவும், இதை மக்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இந்த மாதிரி வன மற்றும் சுற்றுச்சூழல் திட்டத்தை கவின் மிகு தஞ்சாவூா் இயக்கம் முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தை ஏற்று நிலத்தை ஒதுக்கீடு செய்த துணைவேந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவோம் என்றாா் ராதிகா மைக்கேல்.

இந்நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சாவூா் இயக்கச் செயலா் பி. ராம் மனோகா், பல்கலைக்கழகத் தோட்ட மேலாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT