முகப்பு
தஞ்சாவூர்

மதுக்கூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் வடக்கு ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் வடக்கு ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுக்கூா் வடக்கு ஊராட்சியை சோ்ந்த திரைத்துறை பிரமுகா் அண்மையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்தாா். இதன் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

இதையடுத்து, அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களுக்கும் கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. இவா்கள் நால்வரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவா்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தகர சீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.