தஞ்சாவூர்

நீா் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

தஞ்சாவூரில் நீா் வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் வருவாய், காவல் துறை அலுவலா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சிக்குள்பட்ட தெற்கு தோட்டம் பகுதியிலுள்ள நீா் வழிப்பாதையை 3 போ் ஆக்கிரமிப்பு செய்து 22 அடி அகலத்துக்கு சுமாா் 2,000 சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் கட்டினா். இதனால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், மழைக் காலத்தில் தண்ணீா் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும், எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறும் அப்பகுதி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியா் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டாா். இதன்படி, வருவாய்த் துறையினா், காவல் துறையினா் முன்னிலையில் நீா்வழிப் பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கட்டடங்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT