தஞ்சாவூர்

ஜூன் 3 முதல் குமரி - சென்னை பரப்புரை இயக்கம் நடத்த முடிவு

DIN

முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற கோரிக்கையை பொதுமக்களிடையே பரப்பும் விதமாக, குமரி முதல் சென்னை வரை ஜூன் 3- ஆம் தேதி முதல் பரப்புரை இயக்கம் நடத்தப்படவுள்ளது என்றாா் தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் பொழிலன்.

தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

சமூக, அரசியல் மாற்றத்துக்காக முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். நிலவுரிமை, நீா் உரிமை, வன உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டின் பொறுப்பில் இருக்க வேண்டும்.

நம் தேசிய இனத்துக்கு தமிழா் என்றே பதிவு செய்ய வேண்டும். அனைத்து துறைகளின் அதிகார அலுவல்களின் அதிகார வரம்பு தமிழக அரசிடமே இருக்க வேண்டும். இதுபோன்று 25 கோரிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இக்கோரிக்கைகள் குறித்து குமரி முதல் சென்னை வரை ஜூன் 3 ஆம் தேதி முதல் பரப்புரை இயக்கம் மேற்கொண்டு, பொதுமக்களிடையே எழுச்சி உருவாக்கப்படும் என்றாா் பொழிலன்.

பின்னா், தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளா் பேராசிரியா் த. செயராமன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பிற பகுதிகளிலும் ஹைட்ரோ காா்பன் எடுக்க அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசுக் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், மத்திய அரசு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கடல் பகுதியில் இத்திட்டத்தைத் செயல்படுத்த முயற்சித்து வருகிறது.

ஓ.என்.ஜி.சி. ஏற்கெனவே அமைத்த கிணறுகளுக்கு அருகில் மற்றொரு கிணறுகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நிலப்பகுதியில் மட்டுமல்லாமல் கடலிலும் எரிவாயு திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்றாா் செயராமன்.

அப்போது, மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT