முகப்பு
தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் பாரம்பரிய நெல் விதை வங்கி பயிலரங்கம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய நெல் விதை வங்கி பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய நெல் விதை வங்கி பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பல்கலைக்கழக நிா்வாகம், கிரியேட் - நமது நெல்லை காப்போம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன், நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் கே. பாலமுருகன், கிரியேட் - நமது நெல்லை காப்போம் தலைவா் பி. துரைசிங்கம் ஆகியோா் பேசினா்.

இதில், அரியலூா், செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூா், மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, திருவண்ணாமலை, திருவாரூா், திருச்சி, விழுப்புரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து 25 இயற்கை, பாரம்பரிய நெல் முன்னோடி விவசாயிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பயனாளிகளுக்கு விதை வங்கி மூலதன தொகையாக தலா ரூ. 2,000 வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளை மீட்டெடுப்பதில் சாஸ்த்ராவின் முயற்சிகளை கிரியேட் அமைப்பு, இயற்கை விவசாயிகள் சமூகம் பாராட்டின.

இந்நிகழ்ச்சியில் சாஸ்த்ராவின் பணியமா்த்தல் மற்றும் பெரு நிறுவனத் தொடா்பு துறை முதன்மையா் வி. பத்ரிநாத், இணை பேராசிரியா் ஏ. சத்யா, இணைஆய்வாளா் எம். கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.