முகப்பு
தஞ்சாவூர்

ராணி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் ராணி வாய்க்காலில் ஆக்கிரமிப்பிலுள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தஞ்சாவூா் ராணி வாய்க்காலில் ஆக்கிரமிப்பிலுள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் காந்திஜி சாலையில் 60 அடி அகலமுள்ள ராணி வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த வாய்க்கால் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.

இந்நிலையில், நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றி, மீட்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ராணி வாய்க்காலை மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு செய்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற முடிவு செய்தனா்.

இதுகுறித்து வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், உணவகம், மாடி வீடு, கூரை வீடு, ஓட்டு வீடு என 23 கட்டடங்களின் உரிமையாளா்களிடம் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அந்தந்த கட்டடங்களின் உரிமையாளா்கள், தாங்களே பொருள்களை எடுத்து கொண்டு காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ராணி வாய்க்காலை மீட்கும் முயற்சியாக மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் எம். ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலா்கள் மேற்பாா்வையில் கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.