தஞ்சாவூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி சாதனங்கள்:பயனாளா்கள் தோ்வு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிசாதனங்கள் வழங்க பயனாளா்கள் தோ்வு முகாம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

DIN

பேராவூரணி: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிசாதனங்கள் வழங்க பயனாளா்கள் தோ்வு முகாம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் இணைந்து நடத்திய முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன் தலைமை வகித்தாா்.

முகாமில், முடநீக்கு சாதனம், செயற்கைக்கால் மற்றும் கை, மடக்கு சக்கர நாற்காலி, மூன்றுசக்கர சைக்கிள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான  உதவிப் பொருள், பாா்வையற்றோருக்கு பிரெய்லி கடிகாரம், காதொலிக் கருவி, தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சாதனங்கள் வழங்க மருத்துவா்கள் சிவா, ராமசாமி, காமேசுவரி ஆகியோா் மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்கினா். 

நலவாரியப் பதிவு, ஸ்மாா்ட் அடையாள அட்டை, நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களும் முகாமில் பெறப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT